புதுக்கோட்டை அருகே நடந்த மஞ்சுவிரட்டில் மாடு முட்டி ஒருவர் உயிரிழப்பு

மஞ்சுவிரட்டு போட்டியை காண 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டதில் மாடு முட்டி கருப்பையா என்ற முதியவர் உயிரிழந்தார்;

Update: 2021-11-05 08:30 GMT

விராச்சிலையில் நடைபெற்று வந்த மஞ்சவிரட்டு போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.     


                                       

விராச்சிலையில் நடைபெற்று வந்த மஞ்சவிரட்டு போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.


விராச்சிலையில் நடைபெற்று வந்த மஞ்சவிரட்டு போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.


புதுக்கோட்டை மாவட்டம், விராச்சிலையில் நடைபெற்று வந்த மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி முதியவர் உயிரிழந்தால் மஞ்சு விரட்டு நிகழ்ச்சி   பாதியில் நிறுத்தப்பட்டது.

தமிழகத்திலேயே ஜல்லிக்கட்டு போட்டிகள் அதிக அளவில் நடைபெற்று வருவது புதுக்கோட்டை மாவட்டத்தில்தான்,  ஆனால், தற்பொழுது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் மிகுந்த ஏமாற்றத்துடன் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதிக்கு உட்பட்ட விராச்சிலையில் உள்ள மது அடைக்கலம் காத்தாள் அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கோயில் அருகில் உள்ள திடலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டி தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு அனுமதி பெற்று மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது.

இன்று நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில், புதுக்கோட்டை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மஞ்சுவிரட்டு போட்டியில் கலந்து கொள்ள 400க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் கொண்டுவந்து திடலில் ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விட்டனர். ஜல்லிக்கட்டு காளைகளை பிடிப்பதற்கு 200க்கும் மேற்பட்ட வீரர்களும் கலந்துகொண்டு திடலில் அவிழ்த்து விடப்படும் காளைகளை பிடிப்பதற்கு முயற்சி செய்துவருகின்றனர்.

தொடர்ந்து நடைபெற்று வரும் மஞ்சுவிரட்டு போட்டிகள் காளைகள் சீறிப் பாய்ந்து வருகிறது.இப்போது நடைபெற்று வரும் மஞ்சுவிரட்டு போட்டியில் 30க்கு மேற்பட்டோர் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் காளைகள் குத்தியதில் காயமடைந்தனர். அதேபோல் மஞ்சுவிரட்டு போட்டியை காண 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடியதால் காளைகள் குத்தியதில் பார்வையாளர் கருப்பையா என்ற முதியவர் உயிரிழந்தார்.

தொடர்ந்து, மஞ்சுவிரட்டு போட்டியில் காளைகள் முட்டி தள்ளுவதில் பார்வையாளர்கள் அதிகளவில் காயமடைந்து வரும் நிலையில், தற்போது புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதிக்கு உள்பட்ட விராச்சிலை பகுதிகளில் நடைபெற்று வரும் மஞ்சுவிரட்டு போட்டியை பாதியிலேயே நிறுத்தி வைக்க வட்டாட்சியர் உத்தரவிட்டதால், மஞ்சுவிரட்டு போட்டி தற்போது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இதனால், பல்வேறு மாவட்டங்களிலிருந்து மஞ்சுவிரட்டு போட்டியில் கலந்துகொண்ட காளைகளைக்கொண்டு வந்த ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள் போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் பாதியிலேயே திருப்பி அனுப்பி வைத்து வருகின்றனர்.


Tags:    

Similar News