அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ஆலோசனைக் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது

Update: 2022-03-31 07:49 GMT

புதுக்கோட்டை மாவட்டம் திருமையத்தில் தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்   கழகத்தின் சார்பில் ஆலோசனைக்   கூட்டம் நடைபெற்றது

  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் அருகே திருமயத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக புதுக்கோட்டை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.முன்னாள் அமைச்சரும் அமமுக தலைமை நிலையச்செயலாளருமான சண்முகவேலு,அமமுக மாநில அம்மா பேரவை செயலாளர் டேவிட் அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சண்முகவேலு பேசுகையில்,  சட்டமன்றதேர்தலில் அமமுக வெற்றி பெற‌வேண்டும்‌ என்று வேலை செய்யவில்லை..அதிமுக தோற்க வேண்டும் என்றுதான் வேலை செய்தோம் அது நடந்தேறிவிட்டது என்று பேசினார். இந்நிகழ்வில் மாநில அம்மா பேரவை பொருளாளர் நவநீதன், மாநில இலக்கிய அணி துணை செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட, ஒன்றிய நிர்வாகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News