மருத்துவகருவிகள்கொள்முதலில்ஊழல் செய்தவர்கள்மீதுநடவடிக்கை: அமைச்சர் சுப்பிரமணியன்

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் கடந்த 72 மணி நேரத்தில் 25617 பேர் பயன்பெற்றுள்ளனர்

Update: 2021-08-09 13:57 GMT

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பல்வேறு ஆய்வுப் பணிகளுக்காக வருகை தந்த, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள லெம்பலக்குடியில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர், திருமயம் அரசு மருத்துவமனையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், திருமயம் அருகே உள்ள ஊனையூரில் மக்களை தேடி மருத்துவ முகாமை தொடங்கி வைத்து, அந்த பகுதியில் உள்ள ஒரு முதியவர் நீண்ட நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு காலில் காயங்களுடன் இருப்பதை பார்வையிட்டு அவருக்குத் தேவையான மருத்துவ வசதிகளை வழங்க உத்தரவிட்டார்.

இதில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு,  பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை இயக்குனர் செல்வ விநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இயக்குனர் குருநாதன், மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர் சிக்கந்தர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில்:

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் கடந்த 72 மணி நேரத்தில் 25617 பேர் பயண்பெறறுள்ளனர், நீரழிவு, உயர் இரத்த அழுத்தம், ஆதரவு சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றது.

தினசரி கொரோனா பாதிப்பு குணமடைந்தவர்கள் விபரம் வெளியிடுவதை போல் மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்து ஞாயிற்றுகிழமை விடுத்து வாரத்தில் ஆறு நாட்கள் பயனாளிகளின் பட்டியல் பத்திரிகை செய்தியாக வெளியிடப்படும்,

புதுக்கோட்டை மாவட்டத்தில் 98 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கும் 60 சதவீதம் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வருகின்ற சுதந்திர தினத்திற்குள் 100% மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போடும் பணி முழுமையடையும். இதேபோல், கொடைக்கானல் நகராட்சி அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்ட நகராட்சியாக மாறியுள்ளது,

கடந்த ஆட்சியில் அதிக விலை கொடுத்து கொரோனா நோயாளிகளுக்கு உணவு வாங்கியது தடுக்கப்பட்டு, தற்போது உரிய விலை கொடுத்து வாங்கியதன் மூலம் 20 கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டுளள்து. கடந்த ஆட்சியில் மருத்துவ உபகரணங்கள் இரண்டு மூன்று மடங்கு அதிகவிலை கொடுத்து வாங்கியது தடுக்கப்பட்டுள்ளது.

தற்போது  முறைப்படி டெண்டர் விடப்பட்டு, அனைத்து பொருட்களும் உரிய விலை கொடுத்து வாங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் அதிக விலை கொடுத்து வாங்கியதன், பின்னணியில் யார் யார் உள்ளனர் என்று உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,

அதேபோல், வெளிப்படையான முறையில் மருத்துவர்கள் கவுன்சிலிங்  வெளிப்படையான முறையில் டிரான்ஸ்பர் செய்யப்பட்டு வருகின்றனர். இது போல கடந்த ஆட்சியில் நடைபெறவில்லை.

அவுட்சோர்சிங் முறையில் தற்காலிக பணியாளர்களுக்கு உரிய முறையில் ஊதியம் சென்றடையாமல் இருந்த நிலையில், தற்போது அது மாவட்ட ஆட்சியர் மூலம் தேவைப்படும் இடங்களுக்கு, பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு அரசின் ஊதியம் ஒரு ரூபாயாக இருந்தாலும் ,முறையாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது, பணியாளர்கள் நியமிப்பதில் முறைகேடு, கடந்த ஆட்சியில் இருக்கும் பட்சத்தில் உரிய முறையில் யார் சம்பந்தப்பட்டு இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


Tags:    

Similar News