டாக்டர் அப்துல் கலாம் நலச்சங்கத்தின் சார்பில் பொதுமக்களுக்கு மூலிகை டீ
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பொதுமக்களுக்கு கலாம் நலச்சங்கம் மூலிகை டீ வழங்கியது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் காமராஜ் நகர் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கம் மற்றும் ஸ்ரீ போகர் உடல்நலவியல் மையம். உலகம்பட்டி சித்த மருத்துவமனை இணைந்து பொது மக்களுக்கு ஏஜி ஹேர்பல் டீயை வழங்கினர்.
காமராஜ் நகரில் கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாக்கவும் பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் காமராஜ் நகர் டாக்டர் அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கம் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய மூலிகை டீ வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சித்த மருத்துவர் டாக்டர் கருணாநிதி இம்மூலிகை டீயில் 100 சதவீத நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், உடலை தேற்றும் நுரையீரலை பலப்படுத்தி சுவாசப் பிரச்சனை நீங்கி பசித்தன்மை அதிகரிக்க கூடிய சித்த மருத்துவ ஏஜி ஹேர்பல் டீ இதுவாகும் என்பதனை பொது மக்களுக்கு விளக்கி கூறினார். வார்டு உறுப்பினர் கணேசன் மற்றும் அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கத்தினர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்