கார், இருசக்கர வாகனம் மோதியதில் வாலிபர் பலி
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே காரும் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் பலி;
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே திருச்சி-புதுக்கோட்டை புறவழிச்சாலையில் இன்று பிற்பகல் கார் மற்றும்இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், இருசக்கர வாகனத்தில் வந்த புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தை சேர்ந்த சண்முகம் மகன் முருகானந்தம் என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். எதிரே வந்த காரின் ஓட்டுநர் தலைமறைவாகிவிட்டனர். விபத்து குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.