புதுக்கோட்டை: பொதுமக்களிடம் காவல்துறையினர் விழிப்புணர்வு கலந்தாய்வு ஆய்வு கூட்டம்
ரோந்து பணிகளில் ஈடுபடும் காவல் துறையின் செல்போன் நம்பர்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்;
புதுக்கோட்டை, பெரியார் நகரில் உள்ள தனியார் பள்ளியில் இன்று பெரியார் நகர் பகுதி பொதுமக்களுடனான கலந்தாய்வு விழிப்புணர்வு கூட்டம் புதுக்கோட்டை நகர காவல் ஆய்வாளர் குருநாதன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய, நகர காவல் ஆய்வாளர் குருநாதன், பொதுமக்களும் காவல்துறையும் இணைந்து பணியாற்றினால் தான் குற்றங்களை தடுக்க முடியும் . அதேபோல், உங்கள் பகுதிகளில் காவல்துறை சார்பில் ரோந்து பணிகளில் ஈடுபடும் காவல் துறையின் செல்போன் நம்பர்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
அதேபோல், சைபர் கிரைம் குற்றங்களை பற்றியும் பொது மக்களிடம் எடுத்துக் கூறியும் பொதுமக்கள் வங்கி கணக்குகளை முகம் தெரியாத நபர்களிடம் தொலைபேசியின் வாயிலாக தெரிவிக்க கூடாது என்பது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கூட்டத்தில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.