பனைமரம் வெட்டி கடத்த முயற்சி. தடுத்த நாம் தமிழர் கட்சியினர்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பஞ்சாயத்து கிராமத்தில் பனை மரங்கள் வெட்டி கடத்த முயற்சி நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியினர் சிறை பிடித்து மரங்களை மீட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பஞ்சாயத்து கிராமத்தில் பனைமரத்தை மரம் வெட்டுவதாக வந்த தகவலின் அடுத்து நாம் தமிழர் இயக்கத்தினர் சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்று மரம் வெட்டி லாரியில் ஏற்றுவதை தடுத்து நிறுத்தினர். லாரியில் ஏற்றிய கட்டைகள் எல்லாம் அதே இடத்தில் போடவைத்தனர்.
இது சம்பந்தமாக தாலுகா ஆபீஸ் மற்றும் உதவி சப் கலெக்டரிடம் தகவல் தெரிவித்தனர். பின்பு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறியதை அடுத்து நாம் தமிழர் இயக்கத்தினர் கலைந்து சென்றனர்.