மணமேல்குடி அருகே கடலில் குளிக்க குதித்தவர் சடலமாக மீட்கப்பட்டார்

கடலில் குளித்துக் கொண்டிருந்த இவர் கடல் நீரோட்டம் காரணமாக தண்ணீருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கி இறந்து விட்டார்.;

Update: 2021-08-09 12:57 GMT

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே படகு சவாரி சென்றபோது படகிலிருந்து கடலில் குதித்த  இளைஞர் சடலமாக மீட்கப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி பிரிவு திருப்புனவாசல் கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆர்.புதுபட்டினம் மீனவ கிராமத்திலிருந்து கணேசன்  என்பவருக்கு சொந்தமான IND TN 08 MO 754 என்ற பதிவுஎண் கொண்ட( நாட்டுப்படகு) பைபர் படகில்  நந்தலாலா, ஜெயசீலன் பாலு, சஞ்சய்குமார் ஐயப்பன், நாகலிங்கம் ஜோதிமணி ஹரிஹரசுதன் ஆகிய 8 பேரும் நேற்று கடலுக்குள் படகு சவாரி சென்றுள்ளனர். 

நேற்று 03.30 மணி அளவில் சுமார் கடலுக்குள் 11/2 நாட்டிகல் தொலைவில் சென்ற போது ஐயப்பன் என்பவர் கடலுக்குள் குளிப்பதற்காக குதித்துள்ளார் . கடலில் குளித்துக் கொண்டிருந்த அவர் கடல் நீரோட்டம் காரணமாக தண்ணீருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கி விட்டார் அவரை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. 

இந்நிலையில், இன்று ஆர் புதுப்பட்டினம் மீனவ கிராமத்தில் இருந்து 10 பைபர் படகுகளில், மணமேல்குடி கடலோர பாதுகாப்பு காவல் ஆய்வாளர் முத்துக்கண்ணு, மீமிசல் உதவி ஆய்வாளர் ராமராஜன் தலைமையில் காவலர்கள் மற்றும் 50 மீனவர்கள் இன்று காலை 6 மணி முதல் கடலுக்குள் சென்று, காணாமல் போன ஐயப்பனை தேடி வந்தனர். அப்போது காலை 10 மணிக்கு மேற்கண்ட நபரின் உடல் காணாமல் போன இடத்திலேயே சடலமாக கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து  மீட்கப்பட்ட ஐயப்பன் சடலத்தை, மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து, மணமேல்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலுக்குள் படகு சாவரி சென்ற போது படகிலிருந்து ஐயப்பன் கடலில் குளிப்பதற்காக குதித்தவர், சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

Similar News