ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 3 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர்

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததால் பரபரப்பு

Update: 2022-03-31 04:50 GMT

எல்லை தாண்டி மீன் படித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஜெகதாபட்டினம் மீனவர்கள் 

 புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததால்  மீனவ கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜெகதாப்பட்டினம் கோட்டைப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகின்றனர்.  ஜெகதாப்பட்டினம் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்களை கைது செய்து வருவது தொடர் கதையாகி வருகிறது .

இந்த நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 7 மணிக்கே 102 விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.இதில் விசுவலிங்கம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவருடன் சக்திவேல் கலைமாறன் ஆகிய மூவரும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் 23 நாட்டிக்கல் மைல் தொலைவில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறைக்கு கொண்டு சென்றுள்ளனர். சென்ற ஆண்டு ராஜ்கிரண், சுகந்தன், சேவியர் ஆகிய மூவரும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது இலங்கை கடற்படையால் படகு மோதி ராஜ்கிரண் என்பவர் இறந்த சோகம்ம் இன்னும் மறையாத நிலையில் இலங்கை அரசு புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினம் மீனவர்கள் கைது செய்திருப்பது மீனவர் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது

Tags:    

Similar News