சிலட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி யில் மரக்கன்று நடும் விழா

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது;

Update: 2021-09-19 09:10 GMT
சிலட்டூர் அரசு  மேல்நிலைப்பள்ளி யில் மரக்கன்று நடும் விழா

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சிலட்டூரியில் பள்ளி வளாகத்தில்   இனிய அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது

  • whatsapp icon

அறந்தாங்கி அருகே சிலட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.  புதுக்கோட்டை இனிய உலகம் அறக்கட்டளை சார்பில் சிலட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா இன்று நடைபெற்றது.

பள்ளிதலைமையாசிரியர் சுதாகர் தலைமை வகித்தார். அறந்தாங்கி மாவட்டக் கல்வி திராவிடச் செல்வம் கலந்து கொண்டு, மரக்கன்றை நட்டு   தொடங்கி வைத்தார்.

விழாவில்,  அறந்தாங்கி மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கார்த்திகா , அறந்தாங்கி கல்வி மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் கார்த்திக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது.


Tags:    

Similar News