இலங்கை கடற்படையால் புதுக்கோட்டை மீனவர்கள் 2 பேர் கைது: தப்பிய மீனவரை தேடுகின்றனர்

கோட்டைப்பட்டினம் மீனவர்களின் விசைப்படகை தங்களது ரோந்து கப்பல் மூலம் மோதி சேதப்படுத்தி 2 பேரை கைது செய்தனர்;

Update: 2021-10-19 05:45 GMT

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள கோட்டைப்பட்டினம் மீனவர்கள்

 இலங்கை கடற்படையினரால் புதுக்கோட்டை மீனவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.    கடலில் குதித்த மற்றொரு மீனவரை  தீவரமாகத் தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்திலிருந்து 118 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்திய எல்லை பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருக்கையில், அங்கே வந்த இலங்கை கடற்ப்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி சுரேஷ் (39) என்பவருக்கு சொந்தமான விசைப்படகை (எண் TN08 MM 0201) தங்களது ரோந்து கப்பல் மூலம் மோதி உடைத்துள்ளனர். இதில் விசைப்படகு சேதமடைந்து கடலில் முற்றிலுமாக மூழ்கியுள்ளது. 

படகு கடலில் முழ்கியதை அடுத்து அதில் சென்ற மூன்று மீனவர்களில் ராஜ்கிரண் (30) என்ற மீனவர் கடலில் மாயமாகியுள்ளார். மேலும் கடலில் தத்தளித்த மீனவர்கள் சுகந்தன் (23), சேவியர் (32) ஆகிய மீனர்களை  இலங்கை கடற்ப்படையினர் கைது செய்து  இலங்கைக்கு கொண்டு சென்று  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கோட்டைப்பட்டினம் விசைப்படகை இலங்கை கடற்படையினர் தாக்கி மூழ்கடித்ததுடன்   இரண்டு பேர் கைது செய்யப்பட்டதும்  மீனவர் ஒருவர் மாயமான சம்பவம் மீனவ கிராமத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.


Tags:    

Similar News