புதுக்கோட்டை பூவைமாநகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம் பூவைமாநகர் ஆரம்பசுகாதார நிலையத்தில் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் பூவைமாநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பி்ன்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது.
கோவிட் தொற்றை கட்டுப்படுத்த மாவட்டத்தில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு வருவருகிறது. கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதிகளில் வீடுவீடாக சென்று பொது மக்களுக்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
கோவிட் பரவலை கட்டுப்படுத்தி பொதுமக்ளுக்குள் தேவையான மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவருகிறது.
கோவிட் நோயாளிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்தும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என்று தெரிவித்தார். இந்த ஆய்வில் அரசுத்துறை அதிகாரிகள் மருத்துவர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்