அறந்தாங்கியில் ரோட்டரி சங்கம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரண தொகுப்பு வழங்கல்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு கொரோனா நிவாரண தொகுப்பை ரோட்டரி சங்கம் வழங்கியது.;
அறந்தாங்கி ஃப்ரண்ட்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் அரிசி காய்கறிகள் மற்றும் மல்டிவிட்டமின் மாத்திரை உள்ளிட்ட நிவாரண தொகுப்பை. பட்டயத் தலைவர் தங்கதுரை தலைமையில் அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயசீலன் மற்றும் காவல் ஆய்வாளர் செந்தில்மாறன் கலந்து கொண்டு அனைவருக்கும் வழங்கினார்
ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் ஆட்டோ உரிமையாளர்களுக்கு சுமார் 300 குடும்பங்களுக்கு இதனால் பயனடைந்தனர். நிகழ்ச்சியில் அறந்தாங்கி காவல்துறை அதிகாரிகள் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.