அறந்தாங்கி,ஆலங்குடி, பேராவூரணி தொகுதிகளை இணைத்து அறந்தாங்கி வருவாய் மாவட்டம் அமைக்க வலியுறுத்தல்

அறந்தாங்கி,ஆலங்குடி, பேராவூரணி தொகுதிகளை இணைத்து அறந்தாங்கி வருவாய் மாவட்டம் அமைக்க வலியுறுத்தி அதற்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது.

Update: 2021-07-09 03:14 GMT

அறந்தாங்கி,ஆலங்குடி,பேராவூரணி தொகுதிகளை உள்ளடக்கி அறந்தாங்கி வருவாய் மாவட்டம் அமைக்க நடத்தப்பட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.

அறந்தாங்கி,ஆலங்குடி,பேராவூரணி தொகுதிகளை உள்ளடக்கி அறந்தாங்கி வருவாய் மாவட்டம் அமைக்க வேண்டும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி,ஆலங்குடி, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஆகிய மூன்று தொகுதிகளையும் உள்ளடக்கிய அறந்தாங்கி வருவாய் மாவட்டம் உருவாக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், அறந்தாங்கி மாவட்டம் உருவாக்கும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அறந்தாங்கியில் தனியார்  பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், அறந்தாங்கி ஆலங்குடி பேராவூரணி தொகுதிகளை உள்ளடக்கிய அறந்தாங்கி மாவட்டம் உருவாக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைப்பது. அறந்தாங்கியை மாவட்டமாக அமைக்க வலியுறுத்தி அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே கையெழுத்து இயக்கம் நடத்துவது.

பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வர்த்தகர்களை அணுகி அறந்தாங்கி மாவட்டம் தொடங்க ஆதரவு கேட்பது மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வர்த்தகர் சங்க நிர்வாகிகளை சந்தித்து அறந்தாங்கி மாவட்டம் தொடங்கு\வதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் அறந்தாங்கி ஆலங்குடி பகுதிகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள் ஊராட்சி செயலர்கள் முன்னாள் நகர மன்ற கவுன்சிலர்கள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் அறந்தாங்கி மாவட்டம் உருவாக்கும் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News