பாதை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறு; பெண் மீது கொலைவெறி தாக்குதல்

ஆவுடையார்கோயில் அருகே பாதை அமைப்பது தொடர்பாக ஏறபட்ட தகராறு காரணமாக பெண் மீது கொலைவெறித் தாக்குதல் நடந்துள்ளது.;

Update: 2021-08-27 11:27 GMT

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பிரேமா.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் ஒன்றியத்திற்குட்பட்ட வெட்டி வயல் ஊராட்சியில் உள்ள காசாங்குடி கிராமத்தில் காளிதாஸ் என்பவர் அந்தப் பகுதியில் புதிதாக வீடு கட்டி உள்ளார். அந்த வீட்டிற்கு பாதை அமைப்பதற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். அவர்கள் நில அளவை செய்து நீங்கள் பாதை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த பொன்னையா, காளிமுத்து, முனியாண்டி, சோமசுந்தரம், ஆகியோர் காளிதாஸ் பாதை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனையடுத்து, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று இரவு 7 மணி அளவில் கையில் கத்தி அரிவாளுடன் சென்று காளிதாஸின் மனைவி பிரேமாவை கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் கையில் பலத்த வெட்டு விழுந்த நிலையில் பிரேமா மயங்கி விழுந்து அலறினார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அவரது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தபோது அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

மேலும் இது குறித்து நேற்று மீமிசல் காவல் நிலையத்தில் பிரேமா புகார் அளித்தும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

கையில் வெட்டு காயங்களுடன் பிரேமா மணமேல்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  சிகிச்சை பெற்று வரும் பிரேமாவிடம் மீமிசல் போலீசார் வாக்குமூலம் பெற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து பிரேமாவின் உறவினர்கள் கூறுகையில், பிரேமா மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி தப்பி ஓடிய நான்கு பேரையும் காவல்துறை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News