உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு அமைச்சர் மெய்யநாதன் நேரில் ஆறுதல்

இறந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ.1 லட்சமும் , சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 2 பேருக்கு தலா 50 ஆயிரமும் வழங்கினார்

Update: 2021-10-19 15:00 GMT

இலங்கை கடற்படை தாக்குதலில் இறந்து போன மீனவர் குடும்பத்திற்கு நிவாரண தொகை வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்

உயிரிழந்த மீனவர் ராஜ்கிரண் குடும்பத்தை, சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

புதுக்கோட்டைமாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து 118 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்தியஎல்லை பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருக்கையில், அங்கே வந்த இலங்கை கடற்ப்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி சுரேஷ் (39) என்பவருக்கு சொந்தமான விசைப்படகை (எண் TN08 MM 0201) தங்களது ரோந்து கப்பல் மூலம் மோதி உடைத்துள்ளனர்.

இதில்விசைப்படகு சேதமடைந்த நிலையில் கடலில் முற்றிலுமாக மூழ்கியுள்ளது.படகுகடலில் முழ்கியதை அடுத்து அதில் சென்ற மூன்று மீனவர்களில் ராஜ்கிரண் (30) என்ற மீனவர் கடலில் மாயமாகியுள்ளார்.மேலும்கடலில் தத்தளித்த மீனவர்கள் சுகந்தன் (23), சேவியர் (32) ஆகியோரை இலங்கை கடற்ப்படையினர் மீட்டுள்ளனர்.மீட்கப்பட்ட மீனவர்களை இலங்கையில் வைத்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், கடலில் மாயமான மீனவர் இறந்துவிட்டதாகவும், அவரது உடலை மீட்டு இலங்கை வசம் உள்ளதாகவும் அங்கிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை அறிந்த ராஜ்கிரணின் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

திருமணமாகி 40 நாட்களே ஆன ராஜ்கிரனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க தமிழக சுற்றுச்சூழல்த்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் துக்கத்தில் வாடும் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இறந்த மீனவர் ராஜ்கிரண் குடும்பத்திற்க்கு ஒரு லட்சம் நிதியும், சிறைபிடிக்கப்பட்டு இலங்கையில் உள்ள மீனவர்கள் சுகந்தன், சேவியர் ஆகியோர் குடும்பத்திற்க்கு தலா 50 ஆயிரம் நிதியுதவியும் வழங்கினார்.

அப்போது பேசிய அமைச்சர் மெய்யநாதன், இறந்த மீனவரின் உடலை கோட்டைப்பட்டினம் கொண்டுவர தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்க்கொண்டுள்ளார்கள். தமிழக மீனவர்களை இலங்கை கடற்ப்படையினர் தாக்குதல் நடத்தி ஒருவர் உயிரிழந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில், தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்க்கொள்வார்கள் என தெரிவித்தார். நிகழ்வில், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் பரணி கார்த்திக்கேயன், மணமேல்குடி ஒன்றியச் செயலாலர் சக்திராமசாமி, ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் சீனியார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்


Tags:    

Similar News