மீனவர் உடலை மீட்டுத்தர வலியுறுத்தி கருப்புக் கொடியுடன் கடலில் இறங்கிய மீனவர்கள்

மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்ததற்காக இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்;

Update: 2021-10-22 12:30 GMT

கோட்டைபட்டினத்தில் மீனவர் உடலை மீட்டுத் தர வலியுறுத்தி கருப்புக் கொடியுடன் கடலில் இறங்க முற்பட்ட மீனவர்களால் பரபரப்பு.

கோட்டைபட்டினத்தில் மீனவர் உடலை மீட்டுத் தர வலியுறுத்தி கருப்புக் கொடியுடன் கடலில் இறங்க முற்பட்ட மீனவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

இலங்கை கடற்படையால் ரோந்து கப்பல் மோதி கொல்லப்பட்ட மீனவர் ராஜ்கிரண் உடலை மீட்டுத் தரக் கோரியும்‌ கைது செய்யப்பட்ட சேவியர், சுகுந்தன் உள்ளிட்ட இரண்டு மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைபட்டினத்தில் இலங்கை அரசை கண்டித்து மூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்த மீனவரின் உடல்‌ இன்று வந்துவிடும் என்று அதிகாரிகள் உத்தரவாதம் கொடுத்திருந்த நிலையில் தற்போது வரை மீனவரின் உடலை மீட்டு கொண்டுவர எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் ஆத்திரமடைந்த மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் இடத்தில் இருந்து கருப்புக்கொடி ஏந்தி பேரணியாக சென்று அருகே உள்ள கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

பேரணியில் மே. 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட மீனவர் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு உடனடியாக மீனவர் உடலை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்ததற்காக இலங்கை கடற்படையின் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்,கைது செய்யப்பட்ட இரண்டு மீனவர்களையும் விடுவிக்க வேண்டும், உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கும் கடலில் மூழ்கிய விசைப் படத்திற்கும் போதிய இழப்பீடு தர வேண்டும் என்று கூறி முழக்கங்கள் எழுப்பி கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட முயன்ற மீனவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் மீனவரின் உடலை மீட்டு கொண்டுவர வேண்டும் கைது செய்யப்பட்ட இரண்டு மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உயிரிழந்த மீனவரின் குடும்பத்துக்கும் கடலில் மூழ்கிய விசைப்படகிற்கு உரிய நிவாரணம் வழங்கு வேண்டும் அதுவரை தங்களது போராட்டம் தொடரும் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர். 


Tags:    

Similar News