அறந்தாங்கி தொகுதியில் கொரோனா நிவாரணம் வழங்கிய அமைச்சர் ரகுபதி

அறந்தாங்கி தொகுதியில் கொரோனா நிவாரண உதவிகளை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.

Update: 2021-06-12 09:30 GMT

புதுக்கோட்டை மாவட்டம்  அறந்தாங்கி தொகுதியில் உள்ள மணமேல்குடி போலீசாருக்கு அமைச்சர் ரகுபதி கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். அருகில் எம்எல்ஏ ராமச்சந்திரன் 

புதுக்கோட்டைமாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் பொதுமக்களுக்கு கோவிட் நிவாரண உதவிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்களை அமைச்சர் ரகுபதி வழங்கினார் பின்னர் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதிபேசியதாவது :

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் கோவிட் நோய் தொற்றை தடுக்கும் வகையில் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறார். மேலும் நோய் தொற்று காலங்களில் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் கோவிட் நிவாரண உதவித் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக பல்வேறு தன்னார்வ அமைப்புகளின் சார்பிலும் பொதுமக்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கோவிட் நிவாரண உதவிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் இன்றையதினம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கோவிட் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மணமேல்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்களும் மற்றும் காவல் நிலையங்களுக்கு தேவையான முகக்கவசம், கைகழுவும் திரவம் உள்ளிட்ட கோவிட் தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது என்றார். இந்த நிகழ்ச்சியில் அறந்தாங்கி எம்எல்ஏ ராமசந்திரன் கலந்து கொண்டார்.

Tags:    

Similar News