அறந்தாங்கி: கடலில் மிதந்த 23 கிலோ கஞ்சா-சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை
அறந்தாங்கி அருகே கடலில் மிதந்த 23 கிலோ கஞ்சா பொட்டலங்கள் குறித்து சுங்கதுறைஅ திகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.;
கடலில் மிதந்து வந்த கஞ்சா
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஜெகதாப்பட்டினம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட அய்யம்பட்டினம் கடலோரப் பகுதியில் 23 கிலோ கஞ்சா மிதந்து வந்தது. இதனை சுங்கத் துறையினர் மீட்டனர்.
மேலும், சுங்கத்துறை ரோந்து வருவதை கண்டு மர்ம நபர்கள் கடலில் வீசி விட்டுச் சென்றுள்ளனரா? இல்லை இலங்கை பகுதியில் இருந்து கடத்தி வரப்பட்டதா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.