அறந்தாங்கி: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் உட்பட 5 பேர் கைது
அறந்தாங்கியில் கஞ்சா விற்க முயன்ற அதிமுக பிரமுகர் உட்பட 5 நபர்களை காவல்த்துறையினர் கைது செய்து விசாரணை;
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பொற்க்குடையார் கோவில் அருகே கஞ்சா விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. தகவலையடுத்து சம்பவ இடத்திற்க்கு விரைந்த காவல்த்துறையினர், அங்கே இருசக்கர வாகனத்தில் ஒன்றரை கிலோ கஞ்சா கை மாற்ற முற்ப்பட்டது தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து ஒன்றரைக் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மதன்குமார்(30), சகுந்தலா(33), மணிகண்டன்(26) முருகன்(26) மணிமாறன்(24) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
இதில் மதன்குமார் என்பவர் அதிமுக மாவட்டத் தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் என்பதும் கஞ்சா விற்பனையில் முக்கியப் பங்கு வகித்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து 5 நபர்கள் மீதும் வழக்குப்பதிந்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்பு சிறையிலடைக்கவுள்ளனர். பொதுமக்கள் நடமாடும் பகுதியில் கஞ்சா விற்ப்பனை நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.