அறந்தை பிரண்ட்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் திருநங்கைகளுக்கு நிவாரண உதவி

Update: 2021-07-04 18:24 GMT

அறந்தை பிரண்ட்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் திருநங்கைகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன்

திருநங்கைகளுக்கு அறந்தை ப்ரண்ட்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் கொரோனா நலத்திட்ட உதவிகளாக அரிசி காய்கறி, மளிகை பொருட்கள் மற்றும் நிதி உதவி வழங்கப்பட்டது.

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் இரண்டாவது அலை கொரொனாவால் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு சில தளர்வுகளுடன் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் வேலையின்றி வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

இந்நிலையில் வேலையின்றி வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் 60 க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு அறந்தை ப்ரண்ட்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் கொரோனா நலத்திட்ட உதவிகளாக அரிசி காய்கறி, மளிகை பொருட்கள் மற்றும் நிதி உதவி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். 60 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சமூக இடைவெளியோடு கலந்து கொண்டு நிவாரண உதவிகளைப் பெற்றுச்சென்றனர். ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆர். கருணாகரன், பட்டயத் தலைவர் தங்கதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News