புதிய வழித்தடங்களில் அரசு பேருந்து: அமைச்சர் மெய்யநாதன் தொடக்கி வைப்பு
அறந்தாங்கியில் புதிய வழித்தடங்களில் அரசு பேருந்து: அமைச்சர் மெய்யநாதன் தொடக்கி வைப்பு;
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதியில் புதிய வழித்தடங்களில் அரசு பேருந்துகளின் இயக்கத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தொடக்கி வைத்தார்.
அறந்தாங்கி தொகுதிக்கு உள்பட்ட வல்லாவரி, மேற்கு, நெய்வத்தளி மற்றும் பனங்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பேருந்து வசதிகள் இல்லாமல் இருந்து வருவது குறித்து அப்பகுதி பொதுமக்கள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனிடம் கோரிக்கை வைத்தனர்.
பொதுமக்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அந்த கிராமங்களுக்கான வழித்தடத்தில் புதிய பேருந்துகளை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் இளங்கோவன், அறந்தாங்கி கோட்டாட்சியர்(பொ) அபிநயா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.