கூட்டணி கட்சியை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

Update: 2021-03-10 09:15 GMT

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கபடலாம் என வந்த தகவலை கண்டித்து திமுகவினர் கண்டன கோஷங்களுடன் ஊர்வலமாக வந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் அறந்தாங்கி தொகுதியில் ஏற்கனவே சென்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு திருநாவுக்கரசரின் மகன் ராமச்சந்திரன் போட்டியிட்டு தோல்வியடைந்தார். மீண்டும் வரும் சட்டமன்ற தேர்தலில் அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து அறந்தாங்கியில் முன்னாள் எம்எல்ஏ., உதயம் சண்முகம் மற்றும் திமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் அறந்தாங்கி பகுதிகளில் ஊர்வலமாக வந்து எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது ஒருவர் திடீரென டீசல் கேனை எடுத்து தன் மீது ஊற்றிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News