அறந்தாங்கி தனியார் குடோனில் 65 மூட்டை ரேஷன் அரிசி : சார் ஆட்சியர் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தனியார் குடோனில் கடத்தி வைக்கப்பட்டிருந்த 65 மூட்டைகள் ரேஷன் அரிசியை சார் ஆட்சியர் ஆனந்த் மோகன் பறிமுதல் செய்தார்.;

Update: 2021-06-11 12:46 GMT

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தனியார் குடோனில் பதுக்கி வைத்திருந்த கடத்தல் ரேஷன் அரிசி மூட்டைகளை சார் ஆட்சியர் ஆனந்த் மோகன் பறிமுதல் செய்து,  சீல் வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கூத்தாடிவயல் நரிக்குறவர் காலனி வெஸ்ட்லி பள்ளி அருகில் தனியாருக்கு சொந்தமான குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்துள்ளதாக அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகன் தலைமையில் அறந்தாங்கி வட்டாட்சியர் மார்ட்டின் லூதர் கிங், சரக வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் அந்த குடோனில் சோதனை நடத்தப்பட்டது.

சோதனையில் குடோனில் 65 மூட்டைகளில் தலா சுமார் 50 கிலோ அளவில் ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. மேற்படி மூட்டைகள் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து  குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினர் விசாரணை செய்து வருகின்னர்.

Tags:    

Similar News