சேமிப்பு பணம் 5 ஆயிரம் ,கொரோன நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுவர்கள்
ஆலங்குடியில் சேமிப்பு பணம் 5 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதிக்கு சிறுவர்கள் வழங்கினர்.;
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் இன்று கொரோன நிவாரண தொகையான.2000 ரூபாய் நியாயவிலை கடைகளில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு ஆலங்குடி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் 2000 ருபாய் தொகையை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.
அப்பொழுது ஆலங்குடி தொகுதிக்குட்பட்ட கொத்த கோட்டை நியாய விலை கடையில் நிவாரண தொகை 2000 ரூபாய் வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது பிச்சைமுத்து என்பவரின் மகன் மற்றும் மகள் ஆகியோர் தங்களுடைய உண்டியலில் சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த 5 ஆயிரம் ரூபாய் பணத்தை தமிழக முதலமைச்சரின் கொரோன நிவாரண நிதிக்கு வழங்க வந்தனர்.
5000 ரூபாய் பணத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சரிடம் வழங்கியதை சற்றும் எதிர்பார்க்காத அமைச்சர் அந்த குழந்தைகளை மகிழ்ச்சியுடன் பாராட்டினார், இதுபோல் அனைவரும் தங்களால் முடிந்த தொகையை கொரோன நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார். அந்த சிறு குழந்தைகளை பாராட்டினார் இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகள் உள்பட பலர் உடனிருந்தனர்