தஞ்சாவூர் மாவட்டத்தில் மதுபான கடை திறக்கவில்லை, மாவட்ட எல்லையில் உள்ள பக்கத்து மாவட்டத்திற் புகுந்த மது பிரியர்கள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை, மாவட்ட எல்லையில் உள்ள பக்கத்து மாவட்டத்திற்குள் புகுந்த மது பிரியர்கள், மதுபானங்களை வாங்கி சென்றனர்.;

Update: 2021-06-14 11:21 GMT

தஞ்சை மாவட்டத்தில் தொற்று அதிகமாக இருப்பதால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை, இதனால் தஞ்சை மது பிரியர்கள், எல்லைப்பகுதியில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம் ஆவணம் கைக்காட்டியில் மதுபானம் வாங்க குவிந்தனர்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்துள்ள மாவட்டத்திற்கு தளர்வுகளை அறிவித்தார். இன்று 14ஆம் தேதி அரசு மதுபானக்கடைகள் செயல்பட தொடங்கியது.   

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மதுபானக் கடைகளில் காலையிலேயே மக்கள் கூட்டம் குவிந்தது. 

தஞ்சாவூர் மாவட்டத்தில் வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி வருவதால் தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு மதுபான கடைகள் திறக்கப்படவில்லை.

புதுக்கோட்டை - தஞ்சை எல்லையான ஆவணம்கைகாட்டி பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில் 500க்கும் மேற்பட்டோர் வரிசைகட்டி நின்று  மதுபானம் வாங்கி சென்றனர்.,

Tags:    

Similar News