ஆலங்குடி காவல் நிலையத்தில் காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்த எஸ்பி நிஷா பார்த்திபன்

சாட்சிகளை நீதிமன்றத்தில் காலதாமதமின்றி ஆஜர் செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர முனைப்புடன் செயல்பட வேண்டும்;

Update: 2021-12-26 10:00 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி காவல் நிலையத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன்

 ஆலங்குடி காவல் நிலையத்தில் காவலர்களிடம் குறைகளை எஸ்பி நிஷா பார்த்திபன் கேட்டறிந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம்,  ஆலங்குடி காவல்நிலையத்தில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் வருடாந்திர ஆய்விற்காகச் சென்றார். அங்கு, வழக்கு கோப்புகள், நிலைய பதிவேடுகளை பார்வையிட்டார்.

பின்னர், புலன்விசாரணையில் உள்ள வழக்குகளில் விரைந்து விசாரணை முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும்,  நீதிமன்றத்தில் வழக்குகளின் முன்னேற்றம் குறித்தும், சாட்சிகளை நீதிமன்றத்தில் காலதாமதம் இன்றி ஆஜர் செய்து வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டணை பெற்றுத்தர  முனைப்புடன் செயல்பட வேண்டுமென காவல் அதிகாரிகளுக்கு  அறிவுறுத்தினார். 

மேலும் காவல் துறையினரிடம் குறைகளை கேட்டறிந்தும், குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை  எடுத்தார்.மேலும் மரம் வளர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆலங்குடி காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றை  நட்டு வைத்தார்.ஆய்வின்போது ஆலங்குடி உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் வடிவேல் உள்ளிட்ட  காவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News