ஆலங்குடி அருகே தொடர் மழையால் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்:மக்கள் அவதி
ஆலங்குடி அருகே தொடர் மழையின் காரணமாக வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
ஆலங்குடி அருகே தொடர் மழையின் காரணமாக வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ந்து பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வந்தது இந்நிலையில் நேற்று இரவு விடிய விடிய கொட்டி தீர்த்த கன மழையின் காரணமாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழைநீர் புகுந்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வந்த நிலையில் நேற்று மாலை தொடங்கிய கனமழை விடிய விடிய பெய்தது.இந்த கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கொத்தமங்கலம் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் முழங்கால் அளவிற்கு தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.