அரசு உயர்நிலைப் பள்ளியில் வெள்ளம் போல் மழைநீர்: பள்ளி திறப்பதில் சிரமம்
உடனடியாக மழைநீர் அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கல் கோரிக்கை
அரசு உயர்நிலைப் பள்ளியில் வெள்ளம் போல் மழைநீர் சூழ்ந்ததால் பள்ளி திறப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்
தமிழகம் முழுவதும் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்து இருக்கும் நிலையில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை இரண்டு நாட்களாக பெய்து வருகிறது.
இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்திலும் இரண்டு நாட்களாக விட்டு விட்டு லேசாக மழை பெய்து வருகிறது.இந்த நிலையில் நேற்று இரவு விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
அதேபோல் நாளை தமிழக அரசு அரையாண்டு தேர்வுகள் விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்படும் என அறிவித்து இருக்கும் நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதிக்கு உட்பட்ட எஸ் குளவாய்ப்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் அருகில் உள்ள குளத்தில் உடைப்பு ஏற்பட்டு பள்ளி வளாகம் முழுவதும் மற்றும் பல்வேறு இடங்களில் வெள்ளம் போல் மழைநீர் சூழ்ந்ததால் நாளை வழக்கம் போல் பள்ளி செயல்படுமா செயல்படாததால் என அப்பகுதி உள்ள பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்து வருகின்றனர்.
உடனடியாக மழைநீர் அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.