ஆலங்குடி அருகே கள்ளச் சாராயம் காய்ச்ச முயற்சி, ஒருவரை கைது செய்த போலீஸ்
ஆலங்குடி அருகே கள்ளச்சாராயம் காய்ச்ச முயன்ற ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள பாச்சிக்கோட்டை மேலக்காட்டைச் சேர்ந்தவர் ரமேஷ் (35). இவர் அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சாராயம் காய்ச்ச திட்டமிட்டுள்ளார்.
அங்கு தண்ணீர் வசதி இல்லாததால், வாடகை தண்ணீர் டேங்கர் மூலம் தண்ணீரை கொண்டு சென்று, சாராயம் காய்ச்சும் பணியில் ஈடுபட்டுள்ளார்.இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆலங்குடி காவல் உதவி ஆய்வாளர் வேலுச்சாமி, அங்கு சாராயம் காய்ச்சும் பணியில் ஈடுபட்ட ரமேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மேலும், சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட தண்ணீர் டேங்கர், கேஸ் சிலிண்டர், அடுப்பு உள்ளிட்ட உபகரணங்களையும் பறிமுதல் செய்தார்.