ஆலங்குடியில் முழு ஊரடங்கில் கடலை மில்களை யாரும் திறக்கக் கூடாது : வட்டாட்சியர் எச்சரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் ஊரடங்கு முடியும் வரை யாரும் கடலை மில்களை திறக்கக்கூடாது என்று வட்டாட்சியர் கடுமையாக எச்சரித்தார்.;
ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடலை மில் சங்க உறுப்பினர்களை அழைத்து வட்டாட்சியர் பொன்மலர் கூட்டம் நடத்தினார்.கூட்டத்தில் ஊரடங்கு முடியும் வரை கடலை மில்களை திறக்க வேண்டாம் என்றும், எந்தவித வேலையும் செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார். அதற்கு கடலை மில் சங்கத்தினரும் முழு ஊரடங்கு முடிவும் வரை கடலை மில்களை திறக்க மாட்டோம் என சங்கத்தினர் உறுதியளித்தனர்.