முறையாக குடிநீர் வழங்க வேண்டும்: திருவரங்குளத்தில் பொதுமக்கள் தர்ணா

பல கட்டப் போராட்டங்கள் நடத்தியும் இதுவரை குடிநீர் வசதி ஏற்படுத்தி தருவதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை

Update: 2021-10-08 08:15 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதிக்கு உட்பட்ட திருவரங்குளம் ஒன்றிய   அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு  வரும் பொதுமக்கள்

முறையாக குடிநீர் வழங்க வேண்டும் என திருவரங்குளம் ஒன்றிய அலுவலகம் எதிரே  பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டைமாவட்டம், திருவரங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட தேத்தான்பட்டியில் பல வருட காலமாக குடிநீர் முறையாக கிடைக்கவில்லை என வலியுறுத்தி அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அப்பகுதி பொதுமக்கள் தொடர்  போராட்டங்களை நடத்தினர்.

ஆனால், குடிநீர் வசதி செய்து கொடுக்க அதிகாரிகள் முன்வரவில்லை. பல கட்டப் போராட்டங்கள் நடத்தியும் இதுவரை குடிநீர் வசதி ஏற்படுத்தி தருவதற்கு அரசு அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. உப்புத் தண்ணீரைக் குடித்து தங்கள் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கிட்னி, நுரையீரல் பாதிப்பு சிறுவர்களுக்கு பற்களில் கரை ஏற்படுதல் உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட்டு வருகிறது. 

இந்நிலையில், குடிநீர் வழங்க வேண்டுமென  வலியுறுத்தி புதுக்கோட்டை திருவரங்குளம் ஒன்றிய அலுவலகம் எதிரே அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு முற்பட்ட போதும் தங்கள் பகுதிகளில் உடனடியாக குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுத்தால் மட்டுமே போராட்டங்களை கைவிடுவோம் என அப்பகுதி பொதுமக்கள் அதிகாரியிடம் தெரிவித்து தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Tags:    

Similar News