300 லிட்டர் கள்ளசாராய ஊறல்களை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர்
வடகாடு அருகே 300 லிட்டர் கள்ளசாராய ஊறல்களை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர்.;
புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோதமாக சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யும் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை தடுக்க போலீசாரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட நெடுவாசல் மேற்கு கிராமத்தில் முனியாண்டி என்பவரின் தோட்டத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அங்கு சென்ற வடகாடு போலீசார் அந்த தோட்டத்தை சோதனையிட்டபோது 300 லிட்டர் சாராய ஊறல்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்து அளித்த போலீசார் தோட்டத்தின் உரிமையாளர் முனியாண்டி மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.