ஆலங்குடி அருகே மர்மமான முறையில் இளைஞர் மரணம் பற்றி போலீஸ் விசாரணை

ஆலங்குடி அருகே மர்மமான முறையில் இளைஞர் மரணம் அடைந்தது பற்றி போலீஸ் விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-03-31 07:27 GMT

ஆலங்குடி அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த சுந்தர மூர்த்தி   வீட்டில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நம்பன்பட்டியில் உள்ள கடைத்தெருவில் மர்மமான முறையில் இளைஞர் ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாங்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட நம்பன்பட்டியைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் சுந்தரமூர்த்தி(40) இவருக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் சுந்தர மூர்த்தி அவரது வீட்டின் அருகே உள்ள கடையின் வெளியே மர்மமான முறையில் இரத்தக் காயங்களோடு இறந்து கிடந்தார்.இச்சம்பவம் தொடர்பாக அதிகாலையில் அக்கம்பக்கத்தினர் பார்த்து ஆலங்குடி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த டி.எஸ்.பி. வடிவேல் மற்றும் காவல் ஆய்வாளர் அழகம்மை மற்றும் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு உடலை கைப்பற்றி வைத்துள்ளனர்.இது சம்பந்தமாக ராமமூர்த்தி மற்றும் ஜெகநாதன் ஆகிய இருவரை ஆலங்குடி போலீசார் விசாரணைக்காக காவல் நிலையத்தில் வைத் துள்ளனர்.

மேலும் போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவரை வரவழைத்து பரிசோ தனை செய்த பின்னர் உடலை எடுத்துச்செல்ல போலீசார் தீவிரமாக ஈடு பட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News