பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் மீது போக்சோ வழக்கு
பள்ளி மாணவியை, காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்தாதாக லழக்குப்பதிவு செய்யப்பட்டது;
பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் இவரை தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா, வெட்டன்விடுதி அருகேயுள்ள கண்ணகன்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ் மகன் பரமேஸ்வரன்.இவர், அப்பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை, காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்தாராம்.இதுகுறித்து, பள்ளி மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில்,, ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான பரமேஸ்வரனை தேடி வருகிறார்.