7 பேர் விடுதலை விவகாரத்தில் நழுவும் பேச்சுக்கே இடம் கிடையாது: அமைச்சர் ரகுபதி
ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதில் முதல்வர் முக ஸ்டாலினை விட வேறு யாரும் அதிக அக்கறை செலுத்த முடியாது;
7 பேர் விடுதலை விவகாரத்தில் கழுவுகிற மீனில் நழுவுகிற மீன் நான் கிடையாது என்றார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதிக்குட்பட்ட கொத்தமங்கலம், கீரமங்கலம், வடகாடு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிகளில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டார்.
கொத்தமங்கலத்தில் கட்சி நிர்வாகி இல்ல நிகழ்வில்அமைச்சர் ரகுபதி பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது:.ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள 7 பேர் விடுதலையில் சட்டத்துறை அமைச்சரின் பதில் கழுவுற மீனில் நழுவுற மீனாக உள்ளது என நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டு தேவையற்றது.
7 பேர் விடுதலை விவகாரத்தை திமுக ஒருபோதும் நீர்த்துப்போக விடமாட்டோம். ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதில் முதல்வர் முக ஸ்டாலினை விட வேறு யாரும் அதிக அக்கறை செலுத்த முடியாது. அதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில் கழுவுற மீனில் நழுவுகிற மீன் நான் இல்லை. நாங்கள் மிக நேர்மையானவர்கள் என்றார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி