ஆலங்குடி தொகுதியில் புதிய இறகுப்பந்து விளையாட்டு அரங்கம்: அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் திறப்பு

மைதானத்தில் இறங்கி அமைச்சரும் இறகு பந்து விளையாடினார்.அப்போது வீரர்களுக்கு இணையாக அமைச்சரும் ஈடுகொடுத்து விளையாடியது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது

Update: 2021-07-11 17:41 GMT

ஆலங்குடியில் இளைஞர்களுடன் சேர்ந்து இறகுப்பந்து விளையாடும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன்

புதுக்கோட்டை  மாவட்டம், ஆலங்குடி தொகுதிக்குட்பட்ட சிக்கம்பட்டி கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இறகுப்பந்து விளையாட்டு அரங்கத்தை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.

இறகுப்பந்து விளையாட்டு அரங்கை பார்வையிட்ட சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலம் விளையாட்டு துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்ததுடன் விளையாட்டு வீரர்களுடன் உற்சாகமாக கலந்துரையாடினார். இதன் பின்னர், அங்கிருந்த இறகுப்பந்து வீரர்களோடு மைதானத்தில் இறங்கி அமைச்சரும் இறகு பந்து விளையாடினார். அப்போது வீரர்களுக்கு இணையாக அமைச்சரும் ஈடுகொடுத்து விளையாடியது பார்வையாளர் களை வியப்பில் ஆழ்த்தியது .

Tags:    

Similar News