புதுக்கோட்டை: ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் திடீர் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் அமைச்சர் மெய்யநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;
தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அரசு விளையாட்டு மைதானங்களை திடீர் ஆய்வு மேற்கொண்டு வருவது வழக்கம்.
அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளுக்கு வரும் பொழுது திடீரென புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் சிகிச்சைகள் குறித்து விசாரித்தோம் அதேபோல் மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் ஏதேனும் தேவையா என மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களிடமும் கேட்டறிவார்.
அதேபோல் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமைச்சர் மெய்யநாதன் இன்று இரவு புதுக்கோட்டை ஆலங்குடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கே பணிபுரிந்த மருத்துவரிடம் நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்து நோயாளிகளிடமும் மருத்துவமனையில் எவ்வாறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன என்பது குறித்தும் நோயாளியிடம் நலம் விசாரித்தார். இந்த ஆய்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்கள் பலர் உடனிருந்தனர்.