அமைச்சர் மெய்யநாதன் பிறந்தநாள்: குளக்கரையில் திமுகவினர் மரம் நடவு
பிறந்தநாளுக்கு பிளக்ஸ் பேனர்களை தவிர்த்து நாட்டு மரங்களை நட்டு வைத்து வளர்க்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருந்தார்;
அமைச்சர் மெய்யநாதன் பிறந்தநாளை முன்னிட்டு குளக்கரைகளில் மரக்கன்றுகள் நட்டு வைத்த திமுக நிர்வாகிகள்
அமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு திமுக நிர்வாகிகள் மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் தற்போது மரக்கன்றுகள் நடும் பணியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.அதேபோல் சமூக ஆர்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமும் மரக்கன்றுகள் வளர்ப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தபட்டு வருகின்றனர்.
இதனால் தற்பொழுது, பொதுமக்களிடம் மரக்கன்றுகள் வளர்க்கும் ஆர்வம் ஏற்பட்டு அதிக அளவில் மரக்கன்றுகளை நடும் பணியில் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சமூக ஆர்வலர்களும் மூலம் குளக்கரைகளில் பனை விதைகளை நடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற சிவ.வீ. மெய்யநாதன், புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள் வளர்ப்பு குறித்த அவசியத்தை எடுத்துக்கூறி, அதிகளவில் மரக்கன்றுகள் நடுவதற்கு அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் ஆர்வத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக இன்று (செப். 9 ) தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் தனது தொகுதி மக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தார். அதில் தன்னுடைய பிறந்தநாளுக்கு பிளக்ஸ் பேனர்களை தவிர்த்துவிட்டு, நாட்டு மரங்களை நட்டு வைத்து வளர்க்க வேண்டுமென தெரிவித்திருந்தார்..
அதனை கடைபிடிக்கும் விதத்தில், இன்று புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதிக்கு உட்பட்ட வல்லவாரி ஊராட்சியில் கட்சி நிர்வாகிகள், அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பிறந்தநாளை முன்னிட்டு, குளக்கரைகளில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கி, அப்பகுதி முழுவதும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வை நடத்தினர். இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நட்டு வைத்தனர்.