வயலில் நடவு செய்த பெண்களிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் மெய்யநாதன்.
புதுக்கோட்டை மாவட்டம் மறமடக்கி கிராமத்தில் வயலில் நடவு செய்த பெண்களிடம் அமைச்சர் மெய்யநாதன் குறைகளை கேட்டறிந்தார்
புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக அதிக அளவில் மழை பெய்து கொண்டிருப்பதால் மழையை பயன்படுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் தற்போது நாற்று நடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்கனவே விளை நிலங்களுக்குள் மழைநீர் புகுந்து விவசாயிகள் பெரும் வேதனை அடைந்து வரும் நிலை ஒருபுறம் இருக்க மறுபுறம் தொடர் மழையை பயன்படுத்தி விவசாயிகள் தற்போது நாற்று நடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று புதுக்கோட்டை மாவட்டம் மறமடக்கி கிராமத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் அந்த பகுதியில் வயலில் நாற்று நட்டுக் கொண்டிருந்த பெண்களிடம் வயலில் இறங்கி நடந்து சென்று பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார் மேலும் தொடர் மழையின் காரணமாக நாற்று நடும் பணியில் ஈடுபட்ட பெண்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் அமைச்சரிடம் எடுத்துக் கூறினார்.
உடனடியாக அதை சரி செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அப்பெண்களிடம் அமைச்சர் உறுதியளித்தார் நாற்று நடும் பெண்களிடம் வயலுக்குள் இறங்கி குறைகளை கேட்டறிந்த அமைச்சரின் செயலுக்கு நாற்று நட்டுக் கொண்டிருந்தார் பெண்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்