மழை நீர் சூழ்ந்துள்ள திருவரங்குளம் கோயிலை பார்வையிட்ட சட்டஅமைச்சர் ரகுபதி
மழைநீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அமைச்சர் ரகுபதி உத்தரவிட்டார்;
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருள்மிகு அரங்குளலிங்கம் பெரியநாயகி அம்பாள் திருக்கோவிலில் சூழ்ந்துள்ள மழைநீரினை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க, உரிய மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருவரங்குளம் அருள்மிகு அரங்குளலிங்கம் பெரியநாயகி அம்பாள் திருக்கோவிலில் மழைநீர்; சூழ்ந்த பகுதிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேலும் கோயிலின் உட்புறத்தில் மழைநீர் சூழ்ந்த பல்வேறு பகுதிகள் நேரடியாக பார்வையிட்டு மழைநீரை முழுவதுமாக வெளியேற்ற தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில், மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். இந்த ஆய்வில் திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.