ஆலங்குடி அருகே பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விறுவிறுப்பு

ஆலங்குடி அருகே பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

Update: 2022-03-19 08:37 GMT

ஆலங்குடி அருகே பங்குனி திருவிழாவை முன்னிட்டு, நடைபெற்று வரும்  ஜல்லிக்கட்டு போட்டி.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே அரசடிபட்டியில் மயில்வாகனன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு,  முதலாம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை இந்திய கால்நடை நல வாரிய ஜல்லிக்கட்டு ஆய்வுக் குழு உறுப்பினர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் முனைவர் எஸ்.கே.மிட்டல் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில், 600 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும்  பங்கேற்க உள்ள நிலையில் ஆலங்குடி டிஎஸ்பி வடிவேல் தலைமையில் போலீசார்,  பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆலங்குடி வருவாய்துறையினர், சுகாதாரத்துறையினர், கால்நடை துறையினர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் அதிக அளவு ஜல்லிக்கட்டு நடைபெறும் மாவட்டமாக புதுக்கோட்டை திகழ்ந்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக ஆலங்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த ஆண்டு அதிக அளவு ஜல்லிக்கட்டு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News