ஆலங்குடி அருகே மங்கனாம்பட்டியில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மங்கனாம்பட்டியில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.

Update: 2022-03-17 11:44 GMT

மங்கனாம்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மங்கனாம்பட்டி வீரமாகாளியம்மன் கோவில் மது எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து காளைகள் கலந்து கொண்டனர்.

வீரமாகாளி அம்மன் கோவில் மது எடுப்பு விழாவை முன்னிட்டு நடைபெற்றுவரும் இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் 650 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளை பிடித்தனர்.

வாடிவாசலில் இருந்து சீறி பாய்ந்த காளைகளை போட்டி போட்டு காளையர்கள் மல்லுக் கட்டி பிடித்தனர்.

காளையின் பிடியில் இருந்து தப்பிச் செல்லும் காளைகளுக்கும் காளைகளை மல்லுக்கட்டி பிடித்து வரும் மாடுபிடி வீரர்களுக்கும் அண்டா குண்டா பிரிட்ஜ் ஃபேன் கட்டில் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை விழாக் குழுவின் சார்பில் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News