நூதன கெரோனா விழிப்புணர்வு பேனர்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நூதன கொரோனா விழிப்புணர்வு பேனர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.;

Update: 2021-05-20 09:30 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அரசின் கட்டுப்பாடுகளை அலட்சியப்படுத்தி விட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக சாலைகளில் சுற்றும் செயலால் நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காமராஜர் சிலை அருகே நூதன முறையில் ஒரு விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டுள்ளது.அந்த பேனரில், கண்ணீர் அஞ்சலி போஸ்டர் போல வடிவமைத்து 'இதில் உங்கள் படமும், பெயரும் இடம்பெறாமல் இருக்க, ஊரடங்கை கடைபிடிக்கவும்,

தேவையின்றி வெளியில் அலைந்தால் அவஸ்தை நிச்சயம். உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில். அரசின் விதிமுறைகளை கடைபிடிப்போம்.இப்படிக்கு,கொரோனாவால் இறந்த ஆத்மாக்கள் மற்றும் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள்'என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த நூதன விழிப்புணர்வு பேனர் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருவதோடு, நல்ல விழிப்புணர்வு முயற்சி என பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

Tags:    

Similar News