புதுக்கோட்டை அருகே சேவுகம்பட்டியில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி
புதுக்கோட்டை அருகே சேவுகம்பட்டியில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது.
தமிழகத்திலேயே அதிக வாடிவாசல் கொண்ட ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் ஐம்பத்தி ஏழு இடங்களில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் புதுக்கோட்டை அருகே சேவுகம்பட்டி என்ற கிராமத்தில் காளியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பல வருடங்களாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பொதுமுடக்கத்தால் இந்த ஜல்லிக்கட்டு போட்டி தடை பட்டிருந்தது
இந்த நிலையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டி இரண்டு வருடங்களுக்கு பிறகு இந்த ஜல்லிக்கட்டு போட்டியை இன்று காலை 8 மணி அளவில் கோட்டாட்சியர் அபிநயா துவக்கி வைத்தார்.
இந்த போட்டியில் 700க்கும் மேற்பட்ட காளைகள் 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு ஆர்வத்துடன் காளைகளை அடக்கி வருகின்றனர்
இதில் வீரர்கள் பிடியில் சிக்காத காளைகளுக்கும் வெற்றிபெற்ற வீரர்களுக்கும் சைக்கிள், மிக்ஸி, கிரைண்டர், ரொக்கப்பணம் என பல்வேறு விதமான பரிசுப் பொருட்கள் விழா கமிட்டியினரால் வழங்கப்பட்டன.