முன்னாள் எம்எல்ஏ நினைவு நாள் : ரத்ததான முகாமை தொடக்கி வைத்த அமைச்சர்கள்
மேலக் கோட்டையில் உள்ள நினைவிடத்தில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் மரியாதை செய்தனர்;
முன்னாள் எம்எல்ஏ மற்றும் அரசு கொறடா பெரியண்ணனின் நினைவு நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட ரத்ததான முகாமை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் முன்னாள் திமுக மாவட்ட செயலாளரும், அரசு கொறடாவும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மறைந்த பெரியண்ணன் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று அவருடைய சொந்த ஊரான மேலக்கோட்டையில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்நாதன் மாநிலங்களவை எம்பி அப்துல்லா புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.கே. செல்லப்பாண்டியன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசு ஆகியோர் கலந்து கொண்டு ரத்ததான முகாமை துவக்கி வைத்தனர்.
இந்த ரத்ததான முகாமில், கட்சி நிர்வாகிகள் மற்றும் பெரியண்ணன் உறவினர்கள் உள்ளிட்ட பலர் ரத்த தானம் செய்தனர்.பின்னர் மேலக் கோட்டையில் உள்ள பெரியண்ணன் நினைவிடத்தில் மாலை அணிவித்து அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் பலர் மரியாதை செய்தனர். இந்த நிகழ்வில் நகரக் கழகச் செயலாளர் நைனாமுகமது, மாவட்ட பொருளாளர் செந்தில், மாவட்ட அரசு வழக்கறிஞர் வெங்கடேசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.