அரசு தொடக்க பள்ளியில் புகுந்த விஷப்பாம்பை பிடித்த தீயணைப்புத்துறையினர்
உயிருடன் பிடித்த பாம்பை அடர்ந்த வனப் பகுதிக்குள் விடுவதற்கு தீயணைப்புத் துறையினர் கொண்டு சென்றனர்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலையூர் கிராமத்தில் அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் முப்பதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
வழக்கம்போல் பள்ளி திறக்கப்பட்டு மாணவர்கள் வகுப்பறையில் பாடம் பயின்று கொண்டிருந்த பொழுது, அருகே உள்ள சமையல் கூடத்தில் கொம்பேறிமூக்கன் என்ற விஷப்பாம்பு ஒன்று உள்ளே புகுந்தது. சமையலறையில் இருந்த பெண் பாம்பைப் பார்த்துவிட்டு சமையல் அறை கதவை அடைத்துவிட்டு, தலைமையாசிரியரிடம் உடனடியாக தகவல் தெரிவித்துள்ளார்.உடனடியாக தலைமையாசிரியர் புதுக்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பாம்பினை லாவகமாக உயிருடன் பிடித்தனர். உயிருடன் பிடித்த பாம்பை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதற்காக தீயணைப்புத் துறையினர் கொண்டு சென்றனர். அரசு துவக்கப் பள்ளியில் திடீரென நாலரை அடி நீளமுள்ள விஷப்பாம்பு உள்ளே புகுந்ததால் பள்ளியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது