புத்தாண்டை புத்துணர்வோடு வரவேற்ற விவசாயிகள்
சித்திரை முதல் நாள், தமிழ் புத்தாண்டில் விவசாயிகள் ஏர் பூட்டி விளை நிலத்தை உழுது வழிபட்டனர்.
தமிழர் புத்தாண்டான சித்திரை முதல் நாள் நல்லேர் பூட்டி விளை நிலத்தை வழிபட்டால் அந்த ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது விவசாயிகளின் நம்பிக்கையாக உள்ளது.
இந்நிலையில், சித்திரை முதல் நாளான இன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மாங்கோட்டை, கொத்தமங்கலம், செரியலூர், கீரமங்கலம், வடகாடு உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் இந்த ஆண்டு நல்ல மழை பொழிய வேண்டி நல்லேருபூட்டி விளை நிலத்தையும், உழவு மாடுகளையும் வழிப்பட்டனர். சில விவசாயிகள் தாங்கள் புதிதாக வாங்கும்
மாடுகளை சித்திரை முதல் நாளில் உழவிற்கு பழக்கம் செய்வதும் அப்பகுதி விவசாயிகளின் வழக்கம். அதன்படி புதிய மாடுகளை வாங்கிய விவசாயிகளும் நேற்று நிலத்தை உழுது விவசாய பணிகளை தொடங்கினர். மேலும், மாடுகள் இல்லாத
விவசாயிகள் டிராக்டர் மூலம் தங்களது உழவுப்பணிகளை மேற்கொண்டு வழிபட்டனர். தமிழர் புத்தாண்டான சித்திரை முதல் நாள் நல்லேர் பூட்டி விளை நிலத்தை வழிபட்டால் அந்த ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது விவசாயிகளின் நம்பிக்கையாக உள்ளது.