இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடி அசத்திய அமைச்சர் மெய்யநாதன்

அமைச்சர் மெய்யநாதன் திருவரங்குளத்தில் இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடி அசத்தினார்.;

Update: 2022-05-15 12:08 GMT

இளைஞர்களுடன் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கிரிக்கெட் விளையாடினார்.

அமைச்சர் மெய்யநாதன் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பொழுது அங்கே இங்கே இருக்கும் அரசு விளையாட்டு மைதானத்திற்கு சென்று இளைஞர்களுடன் தினந்தோறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பல்வேறு நிகழ்வுக்கு வருகை தந்த அமைச்சர் மெய்யநாதன் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் குப்பகுடி வெல்கம் வாரியர்ஸ் அணியினரால் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்து கிரிக்கெட் விளையாடும் வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடினார்.

மேலும் கிரிக்கெட் விளையாடிய அமைச்சர் மெய்யநாதன் வீரர்களுக்கு பந்து வீசி அசத்தினார். அமைச்சர் மெய்யநாதன் மேலும் இளைஞர்களுடன் அமைச்சர் கிரிக்கெட் விளையாடி அசத்தியது வீரர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் கட்சி நிர்வாகிகளும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

Tags:    

Similar News