கீரமங்கலம் பேரூராட்சி துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் தி.மு.க. நிர்வாகி

கீரமங்கலம் பேரூராட்சி துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்து உள்ளார் தி.மு.க. நிர்வாகி.;

Update: 2022-03-08 13:32 GMT

முதலமைச்சர் உத்தரவையடுத்து கீரமங்கலம் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் தி.மு.க. நிர்வாகி தமிழ் செல்வன்.

தமிழகம் முழுவதும் நடந்து முடிந்த நகராட்சி மாநகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

மேலும் அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது.

தமிழகம் முழுவதும் திமுக அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் பல்வேறு இடங்களில் வெற்றி பெற்றனர்.

இதனை அடுத்து தமிழகம் முழுவதும் கூட்டணிக் கட்சிகளாக துணைத் தலைவர் மற்றும் நகராட்சி தலைவர் பதவி பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான இடங்கள் கூட்டணிக்கு கட்சிகளுக்காக பல்வேறு இடங்களில் ஒதுக்கப்பட்டு மறைமுக தேர்தல் நடைபெற்றது.

இதில் தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதையடுத்து கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் தமிழக முதல் அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

கூட்டணிக் கட்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் தி.மு.க.வினர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.இது கூட்டணிக்கு உகந்தது அல்ல என அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் தமிழக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

அதில் கூட்டணிக் கட்சிகள் ஒதுக்கப்பட்ட இடங்களில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைவரும் பதவி விலகிவிட்டு தன்னை வந்து சந்திக்க வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டார்.

இதனை அடுத்து தமிழகம் முழுவதும் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வெற்றி பெற்றவர்கள் பதவி விலகி வருகின்றனர்.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதிக்கு உட்பட்ட கீரமங்கலம் பேரூராட்சியில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தி.மு.க. சார்பில் எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழ்செல்வன் தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க இன்று தனது பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை பேரூராட்சி செயல் அலுவலரிடம் ஒப்படைத்தார்.

Tags:    

Similar News